
" தேசிய அளவில் நடந்த சி.ஏ தேர்வில், தமிழக ஆட்டோ ஓட்டுனரின் மகள் முதலிடம் “ - இன்றைய தலைப்பு செய்தி இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் .
கடுமையான பரிட்சைகளில் ஒன்றாகக் கருதப்படும் சி.ஏ (chartered accountant ) தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தவர் செல்வி.பிரேமா. பி.காம் பட்டதாரி.
இவரது தந்தை திரு.ஜெயகுமார், ஆட்டோ ஓட்டுனர். தாய், தந்தை, மகள்,மகன் என நான்கு பேர் கொண்ட இந்த தமிழ் குடும்பம் தற்பொழுது வசிப்பது, மும்பையில் ஒரே ஒரு அறை உடைய சிறிய வீட்டில்.
நிச்சயம் இந்த செய்தி நம் அனைவருக்கும் உற்சாகத்தை தரக்கூடியது.
குறிப்பாக மாணவர்களுக்கு. "எங்க அப்பா அதிகம் படிக்கல.அதான் நானும் படிக்கல", "வாய்ப்பு கிடைக்கல.வழி தெரியல"னு சொல்லுபவர்களுக்கு கூடுதல் செய்தி : தேசிய அளவில் முதலிடம் படித்த இந்த பெண்ணின் பெற்றோர், படித்தது பள்ளிப்படிப்பு மட்டுமே.
சிஏ, சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகள் எழுத மன உறுதியும்,ஊக்குவிப்பும் அவசியம். ஒரே முறை எழுதி தேர்ச்சி பெற்றுவிட முடியாது. மாணவர்களுக்கு மன உறுதியிருந்தாலும், பல சமயம், பெற்றோர்கள் இது போன்ற தேர்வுகள் எழுத பிள்ளைகளை ஊக்குவிப்பதில்லை.
ஒரு முறை தோற்றுவிட்டாலே, "நீ படிச்சு கிழிச்சது போதும். ஒழுங்கா வேலைக்கு போய் சம்பாதிக்குற வழிய பாரு"னு சொல்லும் பல பெற்றோர்களை பார்த்திருக்கிறோம்.பெரும்ப
"பொம்பள புள்ள மேல படிச்சு என்னவாக போகுது . பேசாம கட்டிக்குடுக்குற வழிய பாரு "
"எதுக்குமா உனக்கு இந்த வேண்டாத வேல ?"
"எவ்ளோ வருஷம் தான் நீ படிப்ப ?"- நம்ம சமுதாயம் நிச்சயம் இந்த குடும்பத்தை இப்படித் தான் மட்டம் தட்டியிருப்பார்கள்:
எல்லோருக்கும் தன் சாதனை மூலமே பதில் சொல்லிவிட்டார் இந்த பெண்.
கேலி பேசிய அதே சமுதாயம்,சில நாட்களில்,ஈனு இளிச்சிகிட்டே,"எனக்கு டேக்ஸ் அதிகமா புடிச்சுட்டான். என்னனு கொஞ்சம் பாத்து சொல்லுமா"னு வெட்கமே இல்லாம கேட்பார்கள். இந்த chartered accountantஐ பார்க்க கியூவில் நிற்பார்கள்.
"இனி என் அப்பாவை வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன். வேலை செய்து குடும்பத்தை நான் பார்த்துக் கொள்ளப் போகிறேன்"னு சொல்லும் இந்த பெண்ணின் தன்னம்பிக்கை, பலருக்கு உற்சாக டானிக். வாழ்த்துகள் பிரேமா.
- பாலாஜி