அம்மா
*******
# பரிட்சை நேரத்துல ஃபியூஸை பிடிங்கின மின்சாரத்தாயே !

# அலாரம் வெச்சு அமைச்சர்களை மாற்றும் அலர்ட் அம்மாவே !

# வீதிக்கு வீதி டாஸ்மாக் திறந்து, குடிகாரர்களை குஷிப்படுத்தி, வைத்தியருக்கும் வெட்டியானுக்கும் வாழ்வளித்த தெய்வத்தாயே !

# "போரில் அப்பாவிகள் இறப்பது சகஜம்"னு பொன்மொழி தந்த தத்துவத்தாயே !

# தனி விமானத்தில் கூடன்குளம் போய், "நான் உங்களில் ஒருத்தி"னு வசனம் பேசி தேர்தல் முடிஞ்சதும், கரி பூசிவிட்ட புரட்சித்தாயே !

# வண்டலூருக்கு பூனைப்படையோட போய், புலிக்குட்டிகளுக்கு பெயர் வைத்த வீரத்தாயே !

# 'ஐ.சி.யூ விற்குள் ஷூ அணிந்து வரக்கூடாது'னு சொன்ன 70 வயது மருத்துவரை கைது செய்த மருத்துவத்தாயே !

# மக்கள் பணம் 25 கோடியில தஞ்சாவூர்ல பாராட்டுவிழா நடத்திக்கிட்ட காவிரித் தாயே !

# அண்ணா நாமம் வாழ்கனு சொல்லிட்டு, அண்ணா நூலகத்துக்கு நாமம் போட்ட கழகத்தாயே !

# ஊருக்கு கொடுத்த புரட்சித்தலைவர் வழி வந்து, இப்போ ஊரையே கொள்ளையடிச்சு பெங்களூர் கோர்ட்டில் நிற்கும் கொடநாட்டுத் தாயே ! 

# சட்டசபையில 110 விதிபடி கீழ அறிக்கை வாசிச்சிட்டு, மக்களுக்கு வெறும் '111' போடும் அம்மாவே ! 

இந்த ஃபோட்டோவ ஒரே ஒரு தடவ பாருங்க தாயே.

- பாலாஜி.


Photo : Jackson Herby Joe