பிறந்த நாளுக்கு கோயிலுக்கு போவாங்க.
கேக் வெட்டுவாங்க. 
நண்பர்கள சந்திப்பாங்க. 
வாழ்த்து பெறுவாங்க.  

பிரம்மன் 'நிதானம் இல்லாத' நேரத்துல என் தலையில கிறுக்கிட்டான் போல.

டெல்லி வந்து 3 வருஷமாச்சு.
கேக் வெட்ட வேண்டிய நேரத்துல தொப்புள் கொடி வெட்டிக்கிட்டுருந்தேன்.
வாழ்த்து வாங்க வேண்டிய நேரத்துல திட்டும், பல்பும் வாங்குனேன்.


* இன்னைக்கு காலை, புது சட்டை, பேண்ட் போட்டுகிட்டு ஜோரா, ஜாலியா மெஸ்சுக்கு போனேன். பிறந்த நாள்னு தெரியாத சீனியர் 15 நிமிஷம் non stopஆ திட்டினார்.

"ஆஹா ! செம ஸ்டார்ட் டா பாலாஜி. இனி இந்த நாள் மட்டுமில்லை. வருஷத்துல எல்லா நாளுமே இனிய நாள் தான்"னு மனசு சொல்லுச்சு.


* 'துணிகள ஒழுங்கா வெச்சுக்க தெரியாது'னு கேலி பேசுவாங்க.
புது துணி வாங்குறதே தீபாவளி,பிறந்த நாள்னு வருஷத்துக்கு 2 தடவ தான் .'சட்டைய இன்னைக்கு ஒரு நாளைக்காவது புதுசா வெச்சுக்கணும்'னு நினைச்சி முடிக்கல,

"சார், குழந்த பிறந்துடுச்சு.ஆனா தொப்புள் கொடி அறுந்து பிளேசண்டா கற்பப் பையிலேயே மாட்டிக்கிச்சு.உடனே வாங்க"னு தகவல். பிரசவ அறைக்கு ஓடி போய் பார்த்தேன்.
பிரசவித்த பெண்ணுக்கு நிறைய ரத்தம் வெளியேறிடுச்சு.
இப்படியேவிட்டா நோயாளி இறந்திடுவார்.

கிளவூஸ் போட்ட கைய ஆழமா உள்ள விட்டு, நச்சுக்கொடிய பிரிச்செடுத்தேன் (manual removal of placenta).
ரத்தப்போக்கு நின்னுடுச்சு.
ஒரு மணி நேரத்துல நோயாளி சகஜமாகிட்டார்.
எனக்கு போன உயிர் திரும்ப வந்தது.
பிரசவ அறையில இருந்த செவிலியர்கள், செவிலிய மாணவிகள் , பயிற்சி மருத்துவர்கள் எல்லாருக்கும் சந்தோஷம்.

மாணவர்கள் : சார் , புது சட்டையா என்ன விஷேஷம் ?
நான் : இன்னைக்கு பிறந்த நாள்.
வாழ்த்துனாங்க. 
கிளவூஸ் போட்டிருந்தாலும் என் முழங்கை வரை கட்டி கட்டியா ரத்தம்.
கைய கழுவினதும், 'அட என் புது சட்டை தப்பிடுச்சே'னு மனசுக்குள்ள நினைச்சு முடிக்கல,
ஒரு மாணவி : சார், உங்க சட்டையில ரத்தம் .
நான் : எங்க ?
கிட்டத்தட்ட 5 எடத்துல ரத்தக்கறை.
அதான பார்தேன். என் சட்டையாவது தப்புறதாவது.


**************************************
அடுத்து பல்லப்கருக்கு பைக் பயணம் .
வண்டி ஓட்டுறப்போ கல்லூரி நினைவுகள்.

2001 முதல் 2007 வரை - தஞ்சை கல்லூரி.
எப்போதும் அடிதடி பிறந்த நாள் தான்.
முந்தைய நாள் ராத்திரி, உயிர் நண்பர்கள், அன்ப முதுகுல தான் காட்டுவானுங்க. நான் வாங்க, அவங்க கொடுக்க; அவங்க கொடுக்க நான் வாங்க.... 2 நாள் தூங்க முடியாது, ஒரு வாரம் மறக்க முடியாது.


2003 தான் டாப் டக்கர் பிறந்த நாள் .
முதல் நாள் ராத்திரி தப்பிச்சுட்டேன்.
பகல்ல கல்லூரியில சிக்கிட்டேன்.
வகுப்பு முடிஞ்சுது.
வெளிய ஓடி தப்பிக்குறதுக்குள்ள சிக்கிட்டேன்.
உட்காருர டெஸ்குக்கு அடியில வெச்சு நெம்பி எடுத்துட்டாங்க .
வலிய வெளிய காட்டிக்கிட்டா அவமானம்.
முனகிக்கிட்டே போஸ்ட்மார்ட்டம் அறைக்கு போனேன் .
அன்று தான் முதல் போஸ்ட்மார்ட்டம் வகுப்பு.
பேராசிரியர் மேடம், பூச்சி மருந்து குடிச்சிட்டு இறந்தவரின் வயிறை கையில் எடுத்து, "முகர்ந்து பாருங்க"னு நீட்டுனாங்க.
ஆஹா ! என்ன ஒரு மென்மையான வாசனை.
காலத்துக்கும் மறக்க முடியாத, வாசனை மணம் நிறைஞ்ச பிறந்த நாள்.


2007 ல் பயிற்சி மருத்துவர். பிறந்த நாள் .
அதே போஸ்ட் மார்ட்டம் அறை .அதே மேடம்.
இந்த முறை நானே, 'என்ன பாய்சனா இருக்கும்'னு மோந்து பார்த்து யூகித்து சொன்னேன்.


2008,09- வீட்டுல வெட்டியா இருந்த போதும் அதே நண்பர்கள் ஸ்டைல் 'அன்பு' கிடைக்கும் .
எப்படி ?
அதான் கூட பொறந்த தங்காச்ச்சி இருக்காளே.
தூங்குறவன எழுப்பி, நண்பர்கள் இல்லாத குறைய போக்கிடுவா.
எங்க கத்துக்கிட்டாளோ தெரியாது.
பாசக்காரி . அவ கொடுத்தது 2 நாளைக்கு மறக்க முடியாது.

************************************
இன்று இரவு phcகு திரும்பினேன்.

'நானும் விளையாடுவேன்'னு ஷெட்டில் ராக்கெட்டை சண்ட போட்டு பிடிங்கி விளையாடியதில்,
7-love என்ற கணக்கில் தோத்து போனதால ..என்னைய வெளியேத்தி.... சத்தமா ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க...
நானா கேட்டு வாங்குன பல்பு.



அடுத்து?
மாணவர்களுடன் விருந்து.
சந்தோஷம்.


PHC க்கு 2 BP மெஷின் donate செஞ்சு, மறக்க முடியாத மற்றும் ஒரு நாள் கழிந்தது.


நாம பிறக்குறதே பல சோதனைகள கடந்து தான்.
இங்க வாழுறதே சாதனை தான்.
அதனால எல்லா நாளும் கொண்டாட வேண்டிய நாள் தான்.


பாலாஜி.